UN News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
எதிர்வரும் ஆறு வார காலப்பகுதியில் இஸ்ரேலினுடைய வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்ட நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதனால் பலஸ்தீனத்தில் 34 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதலினால் இதுவரையில் காசா பகுதியிலுள்ள 41,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 15 இலட்சத்துக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 18 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Kidhours – UN News
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.