Twitter New Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சமூக வலைத்தளமான டுவிட்டரில் விரைவில் ஸ்கிரீன் ஷாட் வசதி நீக்கப்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தனது பயனர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி ‘ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்’ குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயன்ற சில பயனர்களுக்கு
அந்நிறுவனம் “பாப்-அப்” குறுஞ்செய்தியில், இனி ஸ்கிரீன்ஷாட்களுக்கு பதிலாக குறிப்பிட்ட டுவிட்டின் லிங்கை பகிருங்கள் அல்லது அந்த டுவிட்டை பகிருங்கள் என தெரிவித்துள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் டுவிட்டரில் ஸ்கிரீன்ஷாட் வசதியை நீக்கிய பின் பயனர்கள் இடையூறுகளை சந்திக்காமல் இருக்க அந்நிறுவனம் தற்போதே பயனர்களை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ‘ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்’ குறித்து டுவிட்டர் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
kidhours – Twitter New Update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.