Twitter Bird Auction சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலக சமூக வலைத்தளங்களில் பிரசித்திபெற்ற டுவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதனிடையே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட டுவிட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Twitter Bird Auction
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.