Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நேபாளம் – காத்மாண்டுவில் காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால், பானி பூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் காலரா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பேருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. அப்போது, லிலித்பூர் மாநகராட்சி பகுதியில், பானி பூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, லலித்பூர் மாநகராட்சியில் பானி பூரி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வயிற்றுப்போக்கு போன்ற காலரா அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள சுகாதார நலையத்திற்கு செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.