Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
துபாயில் ஜூலை 1ம் மற்றும் 2ம் திகதிகளில் பாகிஸ்தான் மாம்பழ திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்ற உள்ளது.
இந்த இரண்டு நாள் திருவிழா வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உலகெங்கிலும் பாகிஸ்தான் மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இவ் விழா நடத்தப்படுகிறது.
பாகிஸ்தான் மாம்பழத் திருவிழா பாகிஸ்தானின் தேசியப் பழமான மாம்பழத்தின் வளமான காட்சியையும் பன்முகத்தன்மை மற்றும் இரக்கத்தின் மதிப்புபையும் வெளிப்படுத்துகிறதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற உள்ள மாம்பழத் திருவிழாவில் ஐக்கிய அரபு அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் துபாய் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் வணிக வல்லுநர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வில், விருந்தினர்களுக்கு பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் வரும் தனித்துவமான மாம்பழ உணவுகள் வழங்கப்படும். அதேசமயம் முதல் நாள் நிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
திருவிழாவின் இரண்டாம் நாளான நாளை சமூகத்திற்கான திறந்த நிகழ்வாக இருக்கும். மேலும் இந் நிகழ்வில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், சமையல் போட்டிகள், மாம்பழக் கலைப் பட்டறை, பொருட்கள் வாங்குதல், புகைப்பட சாவடி, மற்றும் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக குறிப்பிடபடுகிறது.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை