Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரித்தானிய நாட்டில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. 1935 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது.
ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என பிரித்தானிய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியாவின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வறண்ட காலநிலைக்கு நாங்கள் முன்பை விட சிறப்பாக தயாராக இருக்கிறோம், ஆனால் பாதிப்புகள் உட்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பதாக. நீர்வளத்துறை மந்திரி ஸ்டீவ் டபுள் தெரிவித்துள்ளார்.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.