Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் அதிசய நகரம் ஒரானியா என தெரியவந்துள்ளது.
17 ஆம் நூற்றாண்டில் டச்சு காலனி ஆதிக்க மக்கள், இங்கு புலம்பெயர்ந்து, ஆரஞ்சு ஆற்றங்கரையில் 8000 ஹெக்டேர் நிலப்பரப்பை தங்களுக்கு சொந்தம் ஆக்கி அங்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் அதிசய நகரம் இதுவாகும். இங்கு டச்சு நாட்டு மக்களின் குடியேற்றம் நிகழ்ந்தது முதல் இதே நிலை தான் நீடிக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் நிற வேற்றுமையை அகற்ற, கறுப்பின புரட்சி வெடித்த காலத்தில் இருந்து இங்கு இதே நிலை தான் நீடிக்கிறது.
கறுப்பின மக்கள் இடையே நிறவேற்றுமை முடிவுக்கு வந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவின் முயற்சியால் தென் ஆப்பிரிக்காவை ஒருங்கிணைந்த நாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒரானியா, தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஒரு பகுதியாக அங்கம் வகித்தாலும், அந்நாட்டின் சட்டங்கள் இப்பகுதிக்கு பொருந்தாது. தனி சுயாட்சி பெற்ற ஒரு பகுதியாக திகழும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இங்கு நீண்ட காலமாக டச்சு வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு உள்ள அனைத்து பணிகளையும் வெள்ளை இன மக்களாக இருக்கும் அவர்களே மேற்கொள்கின்றனர்.
கறுப்பின மக்கள் இப்பகுதியில் காணப்படுவதில்லை.
இது ஒரு வகையில் நிற வேற்றுமை, சமூக நீதிக்கு எதிரான செயல் என கருதப்பட்டால், அப்படி இல்லை என்கின்றனர் அங்கு வாழ்பவர்கள்.
இங்கு வந்து குடியேற கறுப்பினத்தவர்கள் விரும்பவில்லை எனவும் அவர்கள் வந்தால் நாங்கள் வரவேற்போம் என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக தென்னாப்பிரிக்காவில் பல பணக்காரர்கள் வீடுகளில் உள்ள அடிப்படை பணிகள் மற்றும் வேலைக்காரர்களாக கறுப்பினத்தவர்களை அதிகம் காணலாம்.
ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. அடிமட்ட வேலையில் இருந்து அனைத்து வேலைகளையும் தாங்கள் மட்டுமே கவனித்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
அவர்கள் தங்களுக்கான தனி கலாச்சாரம் மற்றும் நாகரீகத்துடன் தனி பணத்தையும் வைத்துக் கொண்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் ஊழல் அந்நாட்டு நிர்வாகத்தில் இணைந்துள்ளாலும், இங்கு தனி ஆட்சி அதிகாரம் நடைபெறுவதால் ஊழலுக்கு இடம் அளிக்காமல் நிம்மதியாக வாழ்ந்து வருவதாக கூறினர்.
மேலும் மின்சாரத் தேவைக்கு சூரியசக்தி மூலம் தங்கள் மின் தேவையை பூர்த்தி செய்து வருவதாகவும், நிலக்கரி பயன்படுத்தாமல் தவிர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.
kidhours – Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.