Threat of Iran Satellites சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28 ) ஈரான் வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மஹாடா (Mahda), கேஹான் – 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ – 1 (Hatef-1) என்ற மூன்று செயற்கைக்கோள்களையே ஈரான் விண்ணில் செலுத்தியுள்ளது.இந்த செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிக்கு சரக்குகளை அனுப்பும் திறன் ஆகியவற்றை சோதிக்க பயன்படுத்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஈரானின் ஏவுகணை சோதனைகள் கடந்த காலங்களில் பல தோல்விகளைக் கண்டிருந்தன.

இந்நிலையில் இஸ்ரேல் காஸா மோதல் நிலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த சோதனை நடவடிக்கையானது பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனது.
Kidhours – Threat of Iran Satellites
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.