Sunday, February 2, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புதேம்ஸ் நதி வறண்டது வரலாறு காணாத வறட்சியில் Tamil Kids News Thems River #...

தேம்ஸ் நதி வறண்டது வரலாறு காணாத வறட்சியில் Tamil Kids News Thems River # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Thems River பொது அறிவு – உளச்சார்பு

- Advertisement -

புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலால் கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பாவிலும் சராசரி வெப்பநிலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தற்போது காட்டுத் தீ பரவல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது.

குறிப்பாக, பிரிட்டன் நாட்டில் வரலாற்றிலேயே முதல்முறையாக ரெட் வார்னிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சமாக 38.7 டிகிரி வெப்பம் தான் பிரிட்டனில் பதிவான நிலையில், அங்கு இம்முறை வெப்பமானது 40 டிகிரி தாண்டியுள்ளது.

- Advertisement -

வெப்ப பாதிப்பை எதிர்கொள்ள அரசு சார்பில் அவசர குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1935ஆம் ஆண்டுக்குப் பின் மிக மோசமான வறட்சியை இங்கிலாந்து சந்தித்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

 

Tamil Kids News Thems River பொது அறிவு – உளச்சார்பு
Tamil Kids News Thems River பொது அறிவு – உளச்சார்பு

 

வழக்கமான மழையில் 35 சதவீத மழை மட்டுமே கடந்த ஜூலை மாதம் கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், உலகப் புகழ்பெற்ற தேம்ஸ் நதி இந்த வறட்சி காரணமாக வற்றி வருவதாக லண்டன் நகர்ப்புற நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

356 கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டன் தேம்ஸ் நதி லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் 1.5 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக நதியின் தொடக்கமான மூலப் பகுதி வறண்டு விட்டதாக நகர்ப்புற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சூழல் குறித்து கால நிலை நிபுணரும், ரீட்டிங் பல்கலைக்கழக பேராசிரியருமான ஹன்னா கோல்க் கூறுகையில், “நதி வறட்சி ஏற்படுவது காரணமாக குடிநீர், பாசனம், தொழில் தேவை போன்ற மக்கள் பயன்பாடு பாதிப்பை சந்திப்பதுடன், நீர் வாழ் உயிரிகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மழை பெய்யவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களை சமாளிப்பதும் கடும் சவாலாகிவிடும். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கோடைக் காலத்தில் கடைகளில் நீரே கிடைக்காத சூழல் உருவாகிவிடும்.

எனவே, மக்கள் மத்தியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்” என்றார்.

 

kidhours – Tamil Kids News Thems River , Tamil Kids News Thems River drought

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.