Taiwan President சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தாய்வான் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதன்படி, அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்கிள வில்லியம் லாய் சிங் தே தாய்வானின் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தாய்வானில் இன்று அதிபர் மற்றும் சட்ட மன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.தாய்வானில் அமைக்கப்பட்ட 17 ஆயிரத்து 795 வாக்கெடுப்பு நிலையங்களில், சுமார் 19.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.இதன்படி, இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் லாய் சிங் தே (Lai Ching-te), கோமிண்டாங் கட்சியின் சார்பில் ஹூ யு இஹ் (Hou Yu-ih) மற்றும் தாய்வான் மக்கள் கட்சியின் கோ வென் ஜே (Ko Wen-je) ஆகியோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இந்த நிலையில், மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களில் வில்லியம் லாய் சிங் தே அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தைவான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லை சிங் டி சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Taiwan President
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.