Taiwan Earthquake உலக காலநிலை செய்திகள்
தைவானின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.
இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. மேலும், தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் இதுவரையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.மேலும் 730 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 60 பேருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த நபர்களில் 3 பேர், அந்த பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Kidhours – Taiwan Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.