Tamil Kids News Taiwan சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தைவான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கும் மனகசப்புகளுக்கு இடையே தைவானுக்கு ஏவுகணை வழங்கும் முடிவை எடுத்துள்ளது அமெரிக்கா.
போர் கப்பல்கள், விமானங்கள், போரில் தாக்கி அழிக்கும் திறன் கொண்டஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா,தைவானுக்குவழங்கமுடிவு செய்துள்ளது.
தைவான் அரசு, சீனாவுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாகஅந்நாடு குற்றம் சாட்டி வந்தது.இந்த நிலையில் கடந்த மாதம்அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி , சீனாவின்கடும்எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றது அந்நாட்டுக்கு மேலும்கோபத்தை உண்டாக்கியது.
இதையடுத்து தைவானை மிரட்டும் விதத்தில் , அந்நாட்டு பொருட்களுக்கு தடை விதித்த சீனா, தொடர்ந்துஅந்நாட்டு எல்லையில் தீவிர போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பெரும் பதற்றம் உருவானது.
அத்துடன் ட்ரோன் விமானங்கள் மூலன் கண்காணிக்கும் பணியையும் சீனா மேற்கொண்டுள்ளது.அந்தவகையில்சமீபத்தில் சீனாவில் இருந்து எல்லை தாண்டி நுழைந்த டிரோன் விமானத்தை, துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்ததாக தைவான் ராணுவம் தெரிவித்திருந்தது.
சீனாவை எதிர்கொள்ள தயாராகும் விதத்தில் ஆயுதங்களை வாங்கி குவிக்க தைவான் திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு சுமார் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறது.
அதன்படி 8 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலானபோர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைஅமெரிக்கா விற்பதாக அறிவித்திருக்கிறது.
போர் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய 60 ஹார்பன் பிளாக் வகை ஏவுகணைகள், எதிரி ஏவுகணைகளை நடுவானில் மறித்து தாக்கி அழிக்கும் 100 ஏவுகணைகள் போன்றவற்றைதைவான் வாங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் அதிநவீன ஏவுகணை , ரேடார் கண்காணிப்பு அமைப்புகளை மற்றும்விரிவாக்க அமைப்பையும் தைவானுக்கு, அமெரிக்கா விற்பனை செய்ய இருக்கிறது.
இது அமெரிக்கா, தைவான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
kidhours – Tamil Kids News Taiwan
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.