Sunday, July 7, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புபாக்கு நீரிணையை நீந்திக் கடந்த ஏழு பேர் Swimming Record

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த ஏழு பேர் Swimming Record

- Advertisement -

Swimming Record சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் 7 இந்திய நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்தனர்.

இந்த சாதனையை இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய நான்கு நீச்சல் வீரர்கள், சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய மூன்று நீச்சல் வீராங்கனைகளும் செய்துள்ளார்கள்.

- Advertisement -

இவர்கள் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி க்கு வரையிலும் உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்கு நீரிணை கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.

- Advertisement -

இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னாரை வந்தடைந்தனர்.

தலைமன்னாரிலிருந்து நேற்று (13) அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த தொடங்கிய 7 பேரும் நேற்று மாலை 3.45 மணி அளவில் (10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்தனர்.

இந்நிலையில் நீந்தி சாதனை படைத்தவர்களை இந்திய சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.

அதேவேளை இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணை கடற்பகுதியை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனியைச் சேர்ந்த ஆர். ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்தி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Kidhours – Swimming Record

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.