Tamil Kids News Suwami Vivekananthar சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தியப் பாராளுமன்ற மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா மெக்சிகோவிற்கு நட்பு முறையில் பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் சுவாமி விவேகானந்தரின் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வைப் பற்றிக் கூறுகையில் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் எல்லை மற்றும் நேரம் கடந்து செல்லும். இந்த சிலை இளைஞர்களுக்கு உத்வேகத்தைத் தோற்றுவிக்கும். இதை நான் இங்குத் திறப்பதில் மிகவும் கௌரவமாக உள்ளது என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மெக்சிகோவில் உள்ள சாபிங்கோ பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் பாண்டுரங் கான்கோஜே மார்பளவு சிலையைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மெக்சிகோ நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியா மற்றும் மெக்சிகோ உடனான நட்பு ரீதியான உறவை மேம்படுத்தவும், இருநாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாச்சாரம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Honoured to unveil a Statue of Swami Vivekananda in Mexico.This is the first statue of Swami ji in Latin America.The statue will be a source of inspiration for people,especially for the youth of the region,to strive & bring the change which will take their country to new prime. pic.twitter.com/W1jbvs0XNX
— Om Birla (@ombirlakota) September 3, 2022
இந்த நிகழ்வு இருநாட்டிற்கு இடையே உள்ள நட்பை அதிகரிப்பதாக அமைத்துள்ளது.
மேலும் இதனை உறுதி செய்யும் வகையில் மெக்சிகன் பாராளுமன்றம் வளாகத்தில் இந்தியா – மெக்சிகோ நட்புக்கான பூங்கா அமைக்கப்பட்டது. அதனைச் சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து இந்தியாவுடனான நட்பை மேம்படுத்தும் மெக்சிகோ பாராளுமன்றம் தலைவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
kidhours – Tamil Kids News Suwami Vivekananthar
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.