Tamil Kids News Study சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என 186 கிமீ வேகத்தில் கார் ஓட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பெம்ப்ரோக் பைன்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் ஜோசப் டி ஆன்ட்ரே மெல்ஹாதோ. 20 வயதான ஜோசப் ப்ளோரிடா பல்கலைகழக்தில் பயின்று வருகிறார்.
இவர் ப்ளோரிடாவில் உள்ள நெடுஞ்சாலையில் தனது காரில் மணிக்கு 116 மைல் அதாவது 186 கிமீ வேகத்தில் பயணித்து காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
மூன்று லேன் கொண்ட நெடுஞ்சாலையில் இத்தனை வேகமாக விதிமுறைகளை மீற பறந்து சென்ற ஜோசபை போக்குவரத்து காவலர் பிடித்துள்ளார்.
காவலர் ஜோசப்பிடம் ஆத்திரத்துடன், ‘பொறுப்பில்லாத இளைஞனே யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்ற வேகத்தில் இப்படி பறந்துகொண்டு செல்கிறாயா.
ஏன் இப்படி முட்டாள்தனமாக கார் ஓட்டி செல்கிறாய் ‘ எனக் கேட்டுள்ளார். இதற்கு மாணவன் ஜோசப் கூறிய காரணம் தான் காவலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய தினம் தான் செமஸ்டரின் முதல் நாள் வகுப்பு. ஆனால் வீட்டில் கிளம்ப தாமதம் ஆகி விட்டது.
மேலும் வளர்ப்பு பூனையை வேறு வீட்டில் விட்டுவிட்டு தான் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும்.
வகுப்புக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் லேட் ஆகக் கூடாது என்ற நோக்கில் தான் 186 கிமீ வேகத்தில் பயணித்தேன் என்றுள்ளான்.
மேலும், தனது செயலுக்கு மாணவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
kidhours – Tamil Kids News Study
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.