Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்உயிருடன் புதைக்கும் விசித்திர சிகிச்சை முறை Strange Treatment Method

உயிருடன் புதைக்கும் விசித்திர சிகிச்சை முறை Strange Treatment Method

- Advertisement -

Strange Treatment Method சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ப்ரீகேடட் அகாடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து

மண்ணில் ஒரு மணி நேரம் வரை புகைக்கும் விசித்திரமான “மனநோய் சிகிச்சை முறை” (psychic therapy) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

இந்த ரஷ்ய நிறுவனம் இதற்காக சுமார் 47 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறது.

- Advertisement -

இது தொடர்பாக நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், இந்த சிகிச்சை முறை உங்கள் அச்சம் மற்றும் பதட்டத்திலிருந்து உங்களை விடுவிக்கும் என்றும் இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளது.

Strange Treatment Method சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Strange Treatment Method சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

அத்துடன் இது உங்களை கவலையைக் கடக்க உதவுவதுடன் மட்டுமல்லாமல் சில மனநலத் திறன்களைக் கண்டறியவும் உதவுகிறது, இந்த சிகிச்சை முறையானது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரீகேடட் அகாடமி இதனை இரண்டு தொகுப்புகளாக வழங்கி வருகிறது, முதல் தொகுப்பு மேலே குறிப்பிட்டுள்ள படி, உயிருடன் முழுமையாக ஒரு மணி நேரம் மண்ணில் புதைக்கும் தொகுப்பு, இரண்டாவது 12 லட்சத்திற்கு ஆன்லைன் இறுதிச் சடங்கு பதிப்பாகும்,

இதில் மெழுகுவர்த்திகள் மற்றும் இறுதி ஊர்வலப் பாடல்களுடன் உங்கள் இறுதிச் சடங்கைக் காணலாம், மேலும் உங்கள் விருப்பத்தையும் நீங்களும் எழுதலாம் என்பதாகும்.

இந்த சிகிற்சையால் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இது குறித்து ப்ரீகேடட் அகாடமியின் நிறுவனர் Yakaterina Preobrazhenskaya கூறுகையில்,

இந்த சிகிச்சை முற்றிலும் பாதுகாப்பானது என்றும், உயிருடன் புதைக்கப்பட்டாலும், மனித உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது, தனது வாடிக்கையாளரின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்றும் அவர் கூறியுள்ளாராம்.

 

Kidhours – Strange Treatment Method

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.