Tamil Kids News Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
05 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் எத்தனை சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு பயணிக்க கூடிய வகையில் இந்த வீசா வழங்கப்படும்.
![இலங்கையில் புதிய விசா நடைமுறை Tamil Kids News Sri Lanka # World Best Tamil Kids News 1 Tamil Kids News Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/08/Untitled-design-2022-08-30T192636.172.jpg)
இதன் மூலம் இலங்கையில் அதிகபட்சமாக 6 மாதங்கள் ஒரே நேரத்தில் தங்க முடியும். இதற்கு முன்னர் 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த விசா மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையால் வழங்கப்பட்ட ஒரு வருட பல நுழைவு விசாவிற்கும் 06 மாதங்களுக்கு வழங்கப்படும் ஒற்றை நுழைவு வீசாவிற்கும் மேலதிகமாக இந்த புதிய வீசா வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
kidhours – Tamil Kids News Sri Lanka
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.