Spy satellite பொது அறிவு செய்திகள்
ஐப்பான் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
வட கொரியாவில் உள்ள இராணுவ தளங்களில் நகர்வுகளைக் கண்காணிக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே குறித்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

ஐஜிஎஸ் ரேடார் 7 என்ற உளவு செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் எச்2ஏ ராக்கெட் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மூலம் தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
இச்செயற்கைக்கோள் பின்னர் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.