Spider venom சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், மிக ஆபத்தான விஷத்தினை கொண்ட சிலந்தியான ஃபன்னல்-வேப் விஷத்தில் இருந்து Hi1a என்ற ஒரு மூலக்கூறை கண்டுபிடித்துள்ளனர், குறித்த மூலக்கூறானது இதயக்கோளாறுகள் மற்றும் மூளைக்கோளாறுகளை பாதுகாத்து உயிர்களை காப்பாற்ற உதவலாம் என்று கண்டுபிடிக்கபட்டது . Hi1a, என்ற மூலக்கூரின் தன்மை ஆபத்தினை தடுத்து, இதய மற்றும் மூளைச் செல்கள் இறப்பதைத் தடுக்கிறது.
10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, சுவிஸ்சலந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கிளென் கிங் தலைமையிலான குழு, இந்த மருந்தை மனிதர்களில் பரிசோதிக்கத் தயாராகியுள்ளது. இதய மாற்ற சிகிச்சையின் போது செல்களை பாதுகாக்க இந்த மருந்து உதவலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இன்பென்சா என்ற நிறுவனத்துடன் இணைந்து, இந்த புதிய சிகிச்சையை சந்தையில் கொண்டு வர திட்டமிடுகிறார்கள். $18 மில்லியன் நிதியுதவியுடன், இந்த ஆராய்ச்சி இதய நோயாளிகளைப் பாதுகாக்க Hi1a ஐ பயன்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.

Hi1a ஐ மருத்துவ பயன்பாட்டுக்காக ஆய்வகத்தில் தயாரிக்க முடியும், எனவே விஷத்தைப்சிலந்திகளில் இருந்து எடுக்க தேவையில்லை. ஸ்ட்ரோக்கிற்குப் பிறகு சில மணி நேரங்களில் கூட இந்த மருந்து செயல்பட முடியும் என்பதால், அவசர நிலை சேவையாளர்களுக்கு இது சரியான மருந்தாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
Kidhours – Spider venom
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.