SpaceX Failure சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் விண்வெளியில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் உயரே சென்றபோது திடீரென தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது வெடித்து சிதறியுள்ளது.
எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.விண்கலம் வெடித்து சிதறி அதன் பாகங்கள் பூமியை நோக்கி விழும் காட்சியை வேறு விமானத்தில் இருந்தபடி பயணிகள் பதிவு செய்துள்ளனர். குறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விண்கலம் பறக்கத் தொடங்கிய 8.5 நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், விண்கலம் நொறுங்கிவிட்டதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.இது தொடர்பில் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “வெற்றி என்பது நிச்சயமற்றது, ஆனால் பொழுதுபோக்கு உறுதி” என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Kidhours – SpaceX Failure
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.