Tamil Kids News Space சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவின் விண்வெளி ஆய்வாளர்கள் அண்ட் வெளியில் இருந்து கிடைக்கப்பெற்ற சமிக்ஞை ஒன்று பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள வானியல் ஆய்வு மையத்திற்கு இந்த வானொலி அலை சமிக்ஞைகள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்டவெளியின் தொலைதூரத்திலிருந்து இந்த சமிக்ஞைகள் கிடைக்க பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த வானொலி அலைகளைக் கொண்டு அண்டவெளியின் விசால தன்மையை எதிர்காலத்தில் அளவீடு செய்து கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த சமிக்ஞை ஃபாஸ்ட் ரேடியோ பெர்ஸ்ட்(FRB) என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.இவை எங்கிருந்து கிடைக்கப் பெறுகின்றன என்பது பற்றி துல்லியமாக அறியப்படாத போதிலும் இவை தொலைதூரத்தில் இருந்து கிடைக்க பெறுவதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.
பொதுவாக இவ்வாறான சமிக்ஞைகள் கிடைக்கும் போது அந்த சமிக்ஞை கிடைக்கும் கால அளவை விடவும் கனடிய விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்ட சமிக்ஞையானது நேரம் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சமிக்ஞைகள் தொடர்பில் தொடர்ச்சியாக நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கனேடிய வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் வேற்று கிரகமொன்றிலிருந்து வானொலி அலை சமிக்ஞை கிடைக்கப் பெற்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Space
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.