Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்விண்வெளியில் விளைத்த தக்காளி Space Cultivation

விண்வெளியில் விளைத்த தக்காளி Space Cultivation

- Advertisement -

Space Cultivation சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

- Advertisement -

பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்த கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- Advertisement -

குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த சூழலில் விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து விஞ்ஞானிகள் அசத்தி இருந்தனர்.

நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது விண்வெளியில் தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் பெரும்பாலானோர் தக்காளியை தங்கள் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். சமைக்காமல் பச்சையாகவும், சமைத்தும் பல வகையில் நம் உணவில் தக்காளி இடம்பெற்றுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சி ரீதியாக தக்காளி விளைவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்ட மினியேச்சர் கிரீன்ஹவுஸ் ஆய்வுக் கூடம் ஒன்றில் விஞ்ஞானிகள் தக்காளியை விடுவித்துள்ளனர்.

இது குட்டை ரக தக்காளி என நாசா தெரிவித்துள்ளது. சுமார் 100 நாட்களுக்கு மேல் தக்காளி அங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது.

முறையே 90, 97 மற்றும் 104-வது நாட்களில் தக்காளி அறுவடை செய்யப்படுள்ளது. அதை பதப்படுத்தி அதன் ஊட்டச்சத்து சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Space Cultivation சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Space Cultivation சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இது எதிர்வரும் காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணத்தின் போது ப்ரெஷ் உணவு பெற உதவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு என நாசா தெரிவித்துள்ளது

 

Kidhours – Space Cultivation

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.