Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்Text-ஐ பயன்படுத்தி வீடியோ உருவாக்கம் Sora AI in Tamil

Text-ஐ பயன்படுத்தி வீடியோ உருவாக்கம் Sora AI in Tamil

- Advertisement -

Sora AI in Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலக அளவில் பெரும்பாலான மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருப்பது ஏஐ தொழில்நுட்பம் தான். இந்த சூழலில் பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்ட்களை (Text) ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ‘Sora’ எனும் ஏஐ மாடலை ஓபன் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

- Advertisement -

அது குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. கடந்த 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி-யை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ சாட்பாட் மூலம் பயனர்கள் பல்வேறு விஷயங்களை உரையாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.சாட்ஜிபிடி-யின் வரவு உலக அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த பேச்சினை பரவலாக்கியது. இதே நிறுவனத்தின் DALL-E மூலம் பயனர்கள் தங்கள் மனதில் கற்பனையாக இருக்கும் படங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்.
மேலும் இந்த மாடல் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில காணொளிகளையும் அவர் பதிவிட்டிருந்தார். அவை பார்ப்பதற்கு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இதே போல மேலும் சில பயனர்களும் Sora AI பயன்படுத்தி உருவாக்கிய காணொளிகளை ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர்.

- Advertisement -

ஒரே நேரத்தில் பல கதாபாத்திரங்களை, துல்லியமாக இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும் என சொல்லப்படுகிறது. இது நாம் என்ன சொல்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வது மட்டுமில்லாமல், நிஜ உலகில் உள்ள காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கிறது.

Sora AI in Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Sora AI in Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஒரே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பத்தால் பல வீடியோ காட்சிகளை உருவாக்க முடியும். அது நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் துல்லியமாக இருக்கும் என OpenAI நிறுவனம் கூறுகிறது. இன்று காலையிலிருந்தே Sora-வைப் பலரும் உற்சாகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்தத் தொழில்நுட்பத்தின் திறன் சந்தேகத்திற்கு இடமின்றி ஈர்க்கும்படியாகவே உள்ளது. இருப்பினும் Text-ஐ பயன்படுத்தி ஒரு நிமிட வீடியோவை சிரமமின்றி உருவாக்கும் மாடலிடம் நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இதை எளிதில் தவறாகப் பயன்படுத்தி விடலாம்..

 

Kidhours – Sora AI in Tamil

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.