Solar Eclipse சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இம்மாதம் 20ஆம் திகதி நிகழவுள்ள சூரிய கிரகணம் கலப்பு சூரிய கிரகணம் என அழைக்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம், அதே சூரிய கிரகணத்திற்குள் முழு சூரிய கிரகணத்திலிருந்து வளைய சூரிய கிரகணமாக மாறுவதே என்றும் அவர் கூறுகிறார்
கிரகணத்தின் பாதையில் உலகின் சில பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் முழு சூரிய கிரகணத்தையும், மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் வளைய கிரகணத்தையும் காண்பார்கள்.
இலங்கை நியம நேரப்படி காலை 7.04 மணிக்கு இந்தியப் பெருங்கடலில் சூரிய கிரகணம் தொடங்கி பசுபிக் பெருங்கடலில் மதியம் 12.29 மணிக்கு முடிவடையும் எனினும் இந்த சூரிய கிரகணம் இலங்கைக்கு தெரியமாட்டாது.
கிரகணத்தின் பாதையில் உலகின் சில பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் முழு சூரிய கிரகணத்தையும், மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் வளைய கிரகணத்தையும் காண்பார்கள்.
இலங்கை நியம நேரப்படி காலை 7.04 மணிக்கு இந்தியப் பெருங்கடலில் சூரிய கிரகணம் தொடங்கி பசுபிக் பெருங்கடலில் மதியம் 12.29 மணிக்கு முடிவடையும் எனினும் இந்த சூரிய கிரகணம் இலங்கைக்கு தெரியமாட்டாது..
மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசிய தீவுகளில் உள்ளவர்கள் கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தை உலக மக்கள் தொகையில் 8.77 சதவீதம் பேர் மட்டுமே பார்க்க முடியும்.
Kidhours- solar eclipse
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.