Tamil kids news snake vaccine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்குத் தனியாக மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை. வேறு நோய்களுக்கானச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளே கொரோனாவிற்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், பிரசில் நாட்டு விஞ்ஞானிகள் பாம்பு விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர். ஜரரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கொரோனா தொற்று பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர்.
இந்த ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, ஜரரகுசு பிட் வைபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரஸில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால், ஜரரகுசு பிட் வைபர் பாம்புகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்து உள்ளார்.
பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
kidhours – tamil kids news snake vaccine
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.