Skipping Gunnies Record பொது அறிவு செய்திகள்
ஒரு நிமிடத்தில் 100-க்கும் மேற்பட்ட ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஒருவர் இடம் பிடித்துள்ளார்.
வங்காளதேச நாட்டின் தாக்குர்காவன் பகுதியை சேர்ந்தவர் ரசெல் இஸ்லாம். சிறு வயதில் இருந்தே ஸ்கிப்பிங் செய்வதில் பயிற்சி பெற்ற அவர், பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த நிலையில், தரையில் அமர்ந்த நிலையில் இருந்தபடி, அதிவிரைவாக ஸ்கிப்பிங் செய்துள்ளார். இதன்படி, ஒரு நிமிடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட முறை ஸ்கிப்பிங் செய்துள்ளார்.
மொத்தம் 117 முறை இதுபோன்று ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்து உள்ளார். இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், 7.6 லட்சம் பேர் அதனை பார்வையிட்டுள்ளனர். 60 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram
இதுபற்றி கின்னஸ் உலக சாதனை வலைதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், நடப்பு ஆண்டு (2022) மார்ச் 13ம் திகதி இந்த சாதனையை அவர் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளது.
Kidhours – Skipping Gunnies Record
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.