Tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து ஐந்து மைல் தொலைவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், கர்ப்பிணிப் பெண் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக கூறப்படும் இந்த விபத்து தொடர்பில் 10 பேர் மாயமாகியுள்ளதாக இறப்புக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் குழுவின் தலைமை வழக்கறிஞர் லூய்கி பட்ரோனகியோ கூறினார்.
எட்டு மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் கவிழ்ந்த பின்னர், கடலோர காவல்படை பிரிவினர் சுமார் 46 பேரை மீட்டு, மீண்டும் லம்பேடுசாவுக்கு கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அகதிகள் துனிசியாவில் தங்கள் பயணத்தைத் தொடங்கியதாக நம்பப்படுவதாக சிசிலியன் நகரமான அக்ரிஜெண்டோவில் நீதவான்களுடன் பணிபுரியும் பேட்ரோனகியோ கூறினார்.

இதேவேளை 250க்கும் மேற்பட்ட மக்கள் நான்கு கப்பல்களில் ஒரே இரவில் சிறிய தீவில் இறங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இத்தாலிக்கு வருகை குறைந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் இது 2021ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 20,000 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் வந்துள்ளன நிலையில், அவர்களில் பலர் ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
மேலும் இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 6,700ஆக இருந்ததாக உட்துறை அமைச்சக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
kidhours – Tamil kids news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.