Wednesday, December 4, 2024
Homeசிறுவர் செய்திகள்வரலாற்றில் மிகப் பழமையான வங்கி World Oldest Bank tamil...

வரலாற்றில் மிகப் பழமையான வங்கி World Oldest Bank tamil kids news

- Advertisement -

tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்த நவீன யுகத்தில், நாம் பணம், நகைகள் மற்றும் முக்கியமான ஆவணங்களை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, மக்களிடன் இந்த பழக்கம் இருந்தது என்றால் நம்ப முடிகிறதா.

அந்த பழமையான வங்கி முறை எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அமைப்புகள் இருந்தன, அவற்றில் என்ன சேமிக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மொராக்கோவில் (Morocco) அமாசி சமூகத்தினர் பயன்படுத்திய வங்கி முறை ரபாத்-இகுடர் (Rabat-Igudar) என்று அழைக்கப்பட்டது. இதை உலகின் பழமையான வங்கி என்று கூறலாம் என மொராக்கோ வேர்ல்ட் நியூஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -
tamil kids news kidhours
tamil kids news kidhours

ய்ட்டர்ஸ், இந்த பழமையான வங்கி குறித்த ஒரு குறுகிய வீடியோ அறிக்கையை வெளியிட்டது. ‘அகாதிர்’ என்றும் அழைக்கப்படும் இந்த பழமையான வங்கி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Yahoo! News மற்றும் பிற வெளிநாட்டு ஊடகங்களும் இது குறித்த தகவல்களை அளித்துள்ளன.

பல ஆராய்ச்சியாளர்கள் இந்த அமாஸி (Amazigh)களஞ்சியங்களை மனித வரலாற்றில் மிகப் பழமையான வங்கி முறைகளில் ஒன்றாக கருதுகின்றனர். பார்லி அல்லது கோதுமை போன்ற உணவு தானியங்களுடன் கூடவே, சட்ட ஆவணங்கள் மற்றும் நகைகள் போன்றவற்றை சேமிக்க அவை பயன்படுத்தப்பட்டன.

இது குறித்து ஆராய்ச்சி நடத்திய பேராசிரியர் காலித் அலரூட் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், இது வங்கிகளின் அமைப்பு தொடங்கியது என்பதற்கான முதல் அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்கிறார்.

ஏனெனில் நாங்கள் வங்கிகள் என்று கூறும்போது, ​​சொத்துக்களைப் பாதுகாக்குன் ஒரு பாதுகாப்பான இடம் என்று பொருள். இந்த அமைப்பு நம் வம்க்கி அமைப்புகளை போலவே பழமையானது என்று அவர் மேலும் கூறினார். அவை எப்போது நிறுவப்பட்டன என்பதை தீர்மானிப்பது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

kidhours – tamil kids news

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.