Sunday, January 19, 2025
Homeசமயம்இஸ்லாம்10 லட்சம் பேருக்கு அனுமதி - சவுதி அரசு Tamil Kids News Saudi

10 லட்சம் பேருக்கு அனுமதி – சவுதி அரசு Tamil Kids News Saudi

- Advertisement -

Tamil Kids News Saudi  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், இந்தாண்டு ஹஜ் பயணத்தை 10 லட்சம் மேற்கொள்ள சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

- Advertisement -
Tamil Kids News Saudi
Tamil Kids News Saudi

புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். மேலும், பயணத்திற்கு வருவதற்கு 72 மணிநேரத்திற்கு முன் கோவிட்-19 பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2020ஆம் ஆண்டு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு 60,000 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் இதுவரை 7.51 லட்சம் கோவிட் பாதிப்பும், 9,055 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஹஜ் பயணம் ஒன்றாகும்.

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது அவர்கள் நம்பிக்கையின் படி அவசியமாகும். ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பேர் ஹஜ் பயணத்திற்காக சவுதி அரேபியா செல்வது வழக்கம்.

 

kidhours – Tamil Kids News Saudi

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.