Saturn’s Rings Will Vanish In 2025 சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சனி கோளின் வெளி வளையங்கள் 2025 மார்ச் மற்றும் நவம்பரில் இல்லாமல் போகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது இக்காலப்பகுதியில் பூமியின் சுற்று வளையத் தளத்துடன் சனி கோள் இணைந்திருப்பதால் (வளையத் தளத்துடன் இணைந்து மறைந்துவிடும்) ஏற்படும் ஒரு அபூர்வ காட்சியாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வானது சுமார் 13 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நிகழ்கிறது, அப்போது சனி கோளில் 30 அடிக்கு மிக குறைவான அளவுக்கு மெல்லிய வளையங்கள், சிறியளவில் காணப்படுவதால் அது பெரிதாக வளையம் இருப்பதுபோன்று காட்சியளிப்பதில்லை .
2027ல் இந்த வளையங்கள் டெலிஸ்கோப்புகளில் முழுமையாகத் தென்படும் என் கூறப்படுகின்றது . சூரியனின் அருகில் சனி இருப்பதால் இந்த நிகழ்வை ஆராய்வது கடினமாக இருந்தாலும், இதற்கு முன்பு 13 நிலவுகள் மற்றும் “E வளையம்” போன்ற முக்கியமான கண்டுபிடிப்புகள் இந்நேரங்களில் நடந்துள்ளன.
2025 ஆண்டு இதைத்தவிர வேறு எந்தவிதமான மாற்றங்களும் அங்கு நிகழாது என வானியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
Kidhours -Saturn’s Rings Will Vanish In 2025, Saturn’s Shape Change in 2025
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.