Rust-free Pillar in the World சிறுவர்களுக்கான உலக செய்திகள்
டெல்லி அருகே ஓர் இரும்புத் தூண் இருக் கிறது. எல்லாரும் இதனை ‘டெல்லி இரும்புத் தூண்’ என்றுதான் சொல்வார்கள். துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், டெல்லிக்கு அருகே மேகரூலி என்ற இடத்தில் இந்த இரும்புத் தூண் உள்ளது. இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட குப்தர்கள் காலத்தில், இரண்டாம் சந்திர குப்தரால் இந்த இரும்புத் தூண் நிறுவப்பட் டது.
குப்தர்கள் காலம் என்பது கி.பி. நான்காம் நூற்றாண்டு.
இன்றிலிருந்து 1600 ஆண்டு களுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது வரலாறு-அறிவியல் ஆச்சரியம் என்னவென்றால், வெட்டவெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்து காயும் இந்தத் தூண் 1600 ஆண்டு களாக துருப்பிடிக்கவில்லை.
உலகத்தின் எந்த விஞ்ஞானிகளாலும் இப்படியொரு இரும்புத் தூணை நிறுவ முடியவில்லை.
Kidhours – Rust-free Pillar in the World
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.