Russian Spy Ship சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பெல்ஜியம் கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவுக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் அந்நாடு விசாரணைகளை நடத்தி வருகிறது.
வடகடல் உள்கட்டமைப்பை ரஷ்யா குறி வைப்பதாக நெதர்லாந்து தெரிவித்துள்ள நிலையில், பெல்ஜியம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.மொஸ்கோவின் நோக்கங்களைப் பற்றி பெல்ஜியம் அப்பாவியாக இருக்கக்கூடாது என வடகடல் மந்திரி வின்சென்ட் வான் குய்க்கன்போர்ன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காற்றாலைகள், கடலுக்கடியில் முன்னெடுக்கப்பட்டுள்ள எரிவாயு மற்றும் கேபிள்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளில் சேதத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த கப்பல் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் கடலில் இனங்காணப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் மொஸ்கோ கருத்து தெரிவிக்கவில்லை.
Kidhours – Russian Spy Ship
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.