Tamil Kids News Russia Visa சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யப் பேராளர்களுக்கு அமெரிக்கா இன்னும் விசா வழங்கவில்லை.நியூயார்க்கில் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது .

வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தலைமையில் 56 பேருக்கு ரஷ்யா விசா கோரியிருந்தது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கு அனுப்பிய கடிதம் அதிர்ச்சி தருவதாக ரஷ்யா கூறியது. 1947-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமையக ஒப்பந்தப்படி ஐக்கிய நாட்டு நிறுவனக் கூட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கவேண்டும்.
பாதுகாப்பு, பயங்கரவாதம், வெளிநாட்டுக் கொள்கை ஆகிய காரணங்களின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்படலாம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்கா ஏற்கனவே ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு அனுமதி தரவில்லை.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் நாடு என்ற முறையில் தனது கடமைகளை வாஷிங்டன் பொறுப்போடு பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 77-ஆவது கூட்டம் இம்மாதம் 13-ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ரஷ்ய அமெரிக்க நாடுகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
kidhours – Tamil Kids News Russia Visa
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.