Tamil Kids News Russia and North Korea சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ரஷ்யா ஆயுதங்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதனால் வடகொரியாவிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை தகவலின் படி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வடகொரியாவிடம் இருந்து உக்ரைனுடனான போருக்கு ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்கியுள்ளனர்.
மேலும் வரும் நாட்களில் இன்னும் எவ்வளவு ஆயுதங்களை வாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லையென்றும் தெரிவித்துள்ளது. மேலும் எந்த வகையான ஆயுதங்களை வாங்கியுள்ளனர் என்று சரியாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
உக்ரைன் உடனான போர் தொடங்கியதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். வடகொரியா ரஷ்யாவிற்கு உதவி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரானிய தயாரிப்பான ட்ரோன்கள் உக்ரைனில் உபயோகப்படுத்தியது ரஷ்யா. அதில் தொழில்நுட்ப கோளாற்றைச் சந்தித்தனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் உலக நாடுகளின் எதிர்ப்புகளின் மத்தியில், ரஷ்யா – உக்ரைன் மேல் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் இது குறித்துத் தெரிவிக்கையில் ரஷ்யா தனது ஆயுதங்களை இந்த போரினால் பெரும்பாலும் இழந்துள்ளனர். இந்த நிலை நீடித்ததால் ரஷ்யா எதிர்காலத்தில் ராணுவத்தில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார்
kidhours – Tamil Kids News Russia and North Korea
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.