Rescue Children from The Amazon Forest சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விமானவிபத்தில் சிக்கி தாயாரும் கூட சென்றவர்களும் உயிரிழந்துவிட்ட நிலையில் கொலம்பியாவின் அமேசன் காட்டில் நாற்பது நாட்கள் நிர்க்கதியாகி அலைந்த, கைக்குழந்தை உட்பட நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குழந்தைகள் நால்வரும் மரவள்ளிக்கிழங்கை உண்டே உயிர்தப்பினார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது. இதனை கொலம்பிய இராணுவத்தின் விசேட படைப்பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.குழந்தைகள் மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்பட்ட மூன்று கிலோ மாவை உண்டார்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,அமேசனின் பழங்குடியினர் இவ்வகை மரவள்ளி மாவை உண்பது வழமை . விபத்து இடம்பெற்ற மறுநாள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த மாவை உண்டனர் அது முடிந்ததும் அவர்கள் தாங்கள் உயிருடன் இருக்ககூடிய இடத்தை தேடதொடங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அவர்களை கண்டுபிடித்தவேளை அவர்கள் மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் முழு விழிப்புணர்வோடும் தெளிவோடும் காணப்பட்டனர் என விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.அவர்கள் பூர்வீககுடிகளை சேர்ந்தவர்கள் என்பதால் காட்டில்வசிப்பதால் உண்டாகக்கூடிய சிலவகை நோய்களில் இருந்து தப்புவதற்காக வலு அவர்களிடம் உள்ளது என தெரிவித்துள்ள விமானப்படை அதிகாரி காட்டை பற்றிய அறிவும் எதனை உண்ணவேண்டும்,தண்ணீர் குடிப்பது போன்ற விபரங்களும் அவர்கள் உயிர்தப்ப உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்டுள்ள நான்கு சிறுவர்களும் கொலம்பிய விமானப்படைக்கு சொந்தமான வான்வெளிஅம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.அவர்கள் நீர்ச்சத்தினை இழந்துள்ளனர் உணவு உண்ணும் நிலையில் இல்லை எனவும், எனினும் ஆனால் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே முதலாம் திகதி இடம்பெற்ற விமானவிபத்தில் சிக்கிய இவர்கள் தாயை இழந்த தவித்த நிலையில் 40 நாட்களின் பின்னர் மரமற்ற பகுதியில் குழந்தைகள் கொலம்பிய இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
Kidhours – Rescue Children from The Amazon Forest
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.