Provides Training for Birds தேடல்
பலவிதமான விசித்திரமான செயல்களை உலகளவில் செய்துவரும் நாடான அமெரிக்காவின் புளோரிடா கடன் கரை ஓரத்தில் பல ஆயிரக்கணக்கான பெலிகன் பறவைகள் உலவிக் கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மீனவர்கள் அந்தப் பறவைகளுக்கு நிறைய மீன்களை உணவாகப் போட்டு வந்தார்கள்.
அத்துடன் எந்த முயற்சியும் இல்லாமல் சுலபமாக உணவு கிடைத்ததால் சுயமாக மீன்களைப் பிடிக் கத்தெரியாத ஒரு புதிய தலைமுறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே அங்கு உருவாகி விட்டது அங்கு வாழ்ந்து வந்த மீனவர்கள் ஒருநாள் இடத்தைக் காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள்.
அங்கு சுகமாக வாழ்ந்து பழகிய பெலிகன் பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போய்விட்டது. ஆகையால் தின மும் நூற்றுக்கணக்கான பறவைகள் பசியால்மடியத் தொடங்கின. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் ‘சுயமாக மீன் பிடித்துச் சாப்பிட இந்தப் பறவைகளுக்கு எப்படிக் கற்றுக் கொடுப்பது?’ என்று தவித்து வந்தார்கள்.

இந்நிலையில் பறவையியல் ஆய்வாளர் ஒருவர், அலாஸ்காவுக்கு விமானத்தில் பறந்து சென்று அங்கு சுயமாக மீன்களைப் பிடித்து வாழ்ந்து வரும் சில பெலிகள் பறவைகளைக் கொண்டு வந்து, பசியால் மடிந்து கொண்டிருக்கும் புளோரிடா பெலிகன்களுடன் விட்டு விட்டார். அலாஸ்கா பெலிகன்கள் கலபமாக மீன்களைப் பிடித்து சாப்பிடுவதைக் கண்ட புளோரிடா பெலிகன்கள் கடலில் இறங்கி மீன் களை வேட்டையாடத் தொடங்கின.
Kidhours – Provides Training for Birds
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.