Postpone Slim Launch சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஸ்லிம் என்ற திட்டத்தின் ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
H-IIA என்ற ராக்கெட் விண்ணில் செலுத்த தயாராக இருந்த நேரத்தில் புறப்பட 24 நிமிடங்கள் இருக்கும்போது கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. வளி மண்டலத்தின் மேற்பகுதியில் காற்று பலமாக வீசியதால் இந்த ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவை ஆராய அனுப்ப திட்டமிடப்பட்ட ராக்கெட் மீண்டும் எப்போது விண்ணில் செலுத்தப்படும் என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
ஜப்பானில் விண்வெளி ஆய்வு நிறுவனமான (JAXA) Smart Lander for Investigating Moon சுருக்கமாக SLIM விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருந்தது. ஸ்லிம் விண்கலத்தில் எடை குறைந்த லேண்டர் மற்றும் எக்ஸ்ரே இமேஜிங் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது.
ஜப்பான் விஞ்ஞானிகள் இத்திட்டத்திற்கு ’மூன் ஸ்னைப்பர்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஸ்லிம் விண்கலம் நிலவை அடைய சுமார் 4 முதல் 6 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமே நிலவில் துல்லியமான தரையிறங்கும் நுட்பங்களை ஆராய்வது.
ஏற்கனவே ஆகஸ்ட் 26 ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருந்து மோசமான வானிலை காரணமாக ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் வானிலை காரணமாக விண்ணில் செலுத்தும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவின் தென் பகுதியில் விழுந்து உடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே, ஜப்பானின் திட்டமும் பாதியில் நின்றுவிட்டதால் ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Kidhours -Postpone Slim Launch , Postpone Slim Launch update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.