Tamil Kids News Photography Award பொது அறிவு – உளச்சார்பு
உக்ரேனிய புகைப்பட பத்திரிக்கையாளரான எவ்ஜெனி மலோலெட்கா, புகைப்பட இதழியல் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான விசா டி’ஓர் விருதை ரஷ்யா உக்ரைன் போரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்காக வெற்றி பெற்றுள்ளார்.
பிரென்ச் நாட்டில் பெர்பிக்னன் நகரில் நடைபெற்ற விசா டி’ஓர் விருது நிகழ்ச்சியில் புகைப்பட பத்திரிக்கையாளரான எவ்ஜெனி மலோலெட்கா ரஷ்யா உக்ரைன் போரில், ரஷ்யா மரியுபோல் நகரத்தை வீழ்த்தி முற்றுகை நடத்திய தருணங்களைப் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார்.
அவரின் புகைப்படத்திற்குப் புகைப்பட இதழியல் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான விசா டி’ஓர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த விருதை உக்ரைனிய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார்.
35 வயதான இவர் அசோசியேட்ட பிரஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவர். மேலும் ரஷ்யா உக்ரைன் போரில் மரியுபோல் பகுதிக்கு முதலில் வந்தடைந்த காணொளி பத்திரிகையாளரான எம்ஸ்டிஸ்லாவ் செர்னோவ் – உடன் பணியாற்றியவர்.
அவர் எடுத்த புகைப்படங்கள் மரியுபோல் பகுதியில் போரினால் நடந்த பரிதாபமான மற்றும் கொடூரமான சம்பவங்களைக் காட்சிப்படுத்தி இருந்தது.
அதில் ரஷ்யா முற்றுகை போது குழந்தைகள் கொல்லப்பட்டது, முழு மாத கர்ப்பிணி கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டது மற்றும் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அப்போதே எழுப்பப்பட்ட கல்லறை போன்றவை இடம்பெற்றுள்ளது.
4 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழும் மரியுபோலில் ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. அப்போது ரஷ்யாவின் குண்டு நேரடியாக மகப்பேறு மருத்துவமனையில் விழுந்தது. இந்த நிகழ்வு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விருதுக்காக மேலும் இரண்டு பேர் தேர்வு பட்டியலிலிருந்த நிலையில் இவருக்கு இந்த ஆண்டிற்கான விருது கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சர்வதேச புகைப்பட இதழியலுக்கான விருதில் அதிக தலைப்பில் இடம்பெற்றிருந்தது உக்ரைன் போர் என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Photography Award
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.