Passengers Bus Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மத்திய ஆப்பிரிக்க நாடொன்றில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள இசிகா நகரில் இருந்து பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. இதேவேளை டவ்லா – இடா சாலையில் சென்றபோது சாலையின் எதிரே வந்த லொறி மீது மோதி பஸ் கோர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் பயணிகள் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Kidhours – Passengers Bus Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.