Tamil Kids News Paris City சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மீதான மக்களின் விருப்பம் குறைந்து வருவதாகவும் லட்சக்கணக்கில் மக்கள் நகரை விட்டு வெளியேறி வருவதாகவும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்களுக்கு பாரிஸ் மீதான வெறுப்பு மற்றும் அங்கு நடக்கும் மோசமான செயற்பாடுகளினால் கோபமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நூற்றுக்கணக்கில் குறைந்த மக்கள் அதன் பின்னர் லட்சக்கணக்கில் குறைய ஆரம்பித்துள்ளனர்.
பாரிஸ் மக்கள் எடுத்துள்ள இந்த முடிவினால் வேறு பல பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தலைநகரை விட்டு வெளியேறும் பெரும்பாலான மக்கள் லியோன் நகரில் குடியேறுகிறார்கள் எனவும் அங்கு எல்லா வயதினரும் இணைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
அதற்கமைய, பாரிஸ் மக்கள் லியோனை அடுத்து அதிகம் தெரிவு செய்யும் இடமாக துலூஸ் நகரம் உள்ளதாக ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நோந்த், போர்தோ மற்றும் மார்சே போன்ற நகரங்களை பாரிஸ் மக்கள் தெரிவு செய்கின்றனர்.
இவ்வாறு வெளியேறும் இல் து பிரான்ஸினை சேர்ந்த குடியிருப்பாளர்களிலும் பெரும்பாலும் தம்பதிகள் அல்லது தனி நபர்கள் மற்றும் 45 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளார்கள்.
எனினும் பழமையான பாரிஸ் மக்களான 40 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மார்சே செல்வதற்கு அதிகம் விருப்பம் காட்டுகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீஸ் நகரிலுள்ள சூரிய ஒளியில் ஓய்வு பெற விரும்புகின்றனர்.
மார்சேயிலுள்ள சிறந்த காலநிலையை அதிகளவிலான இல் து பிரான்ஸ் மக்கள் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மக்கள் வெளியேறும் நிலை அதிகரித்தால் பாரிஸில் மக்கள் தொகை சடுதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Paris City ,Tamil Kids News Paris City Situation
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.