Sunday, December 1, 2024
Homeசிறுவர் செய்திகள்மூச்சுவிட கஷ்டமாகலாம்.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை! Oxygen Shortage

மூச்சுவிட கஷ்டமாகலாம்.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை! Oxygen Shortage

- Advertisement -

Oxygen Shortage சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பூமியில் உயிரினங்கள் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதாகும். வளி மண்டலக் காற்றில் அதன் அளவு 21 % ஆக உள்ளது. இதுபோக, நைட்ரஜன் (78%), கார்பன்டை ஆக்சைடு, ஹெலியம், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகிய வேதிப் பொருட்கள் உள்ளன. பெரும்பாலான உயிரினங்கள் மூச்சு விடும்போது ஆக்சிசன் பயன்படுத்தப்படுவதால் அவை உயிர்வாழத் மிகத் தேவையான ஒன்றாக விளங்குகிறது.

வளிமண்டலக் காற்றில் நைட்ரோஜன், ஆக்சிஜன் அளவின் மட்டுமே 99% க்கும் அதிகமாக உள்ளன. ஆனால், இந்த வளிமண்டல காற்றுத் தொகுப்புகள் எப்போதுமே இப்படி இருந்ததில்லை. உதாரணமாக, 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக, பூமி உருவான ஆரம்ப கட்டத்தில் வளிமண்டல காற்றின் தன்மை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அப்போது, கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நீர் ஆவி ஆகியவையே அதிகமாக இருந்தது.இந்நிலையில், காற்றில் பரந்து கிடக்கும் ஆக்சிஜன் அளவு முன்பு இருந்ததை போலவே குறையலாம் என்று விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர். இதுதொடர்பாக, Nature என்ற அறிவியில் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -
Oxygen Shortage சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Oxygen Shortage சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் , ” புவிவெப்பம் காரணமாக பூமியின் மேற்பரப்பில் இருந்து நீராவி அதிகளவு வெளியாகும் நிலையில், பூமியின் காலநிலை அமைப்பில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் காரணமாக கடுமையான வெப்பத்தை உணர வேண்டிய சூழல் உருவாகும். இதற்கு முந்தைய நிலையில், வளிமண்டலத்தில் உள்ள பிராணவாயு நீக்கம் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

- Advertisement -

இருப்பினும், இந்த கட்டத்தை எட்ட பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்றும் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அப்போது, சூரியனின் பிரகாசத்தில் மாற்றம் ஏற்படும் என்றும், கார்பன்டை ஆக்சைடு அளவு கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பன்டை ஆக்சைடு குறைந்தால் , ஒளிசேர்க்கை மூலம் உயிர்வாழும் தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் அழியும் சூழல் உருவாகும். இதனால், மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி குறையத் தொடங்கும்.

 

Kidhours – Oxygen Shortage

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.