Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணமாக வருகிற 20-ந்தேதி நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது.இதில் ஜெப் பெசோஸ் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளரான வாலி பங்க் (வயது 82) பயணிக்கிறார். இதன் மூலம் விண்வெளிக்கு செல்லும் வயதான நபர் என்கிற பெருமையை வாலி பங்க் பெறுகிறார்.
இது தவிர அவர்களுடன் மேலும் 2 பேர் பயணிக்கலாம் என்பதால் அதற்கான இருக்கைகள் ஏலம் விடப்பட்டன. அதில் ஒரு இருக்கையை அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோஸ் டேமன் என்பவர் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.205 கோடி) ஏலம் எடுத்தார்.
ஆனால் அவர் ஜெப் பெசோசுடன் தனக்கு பதிலாக தன்னுடைய 18 வயது மகன் ஆலிவ் டையமென் பயணிப்பார் என அறிவித்தார். இதனை புளூ ஆரிஜின் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு செல்லும் முதல் இளம் வயது நபர் என்கிற பெருமையை ஆலிவ் டையமென் பெற உள்ளார்.
முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜின் கலாக்டிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் நிறுவனரான ரிச்சர்ட் பிரான்சன் அவரது நிறுவனம் தயாரித்த ராக்கெட் மூலம் கடந்த வாரம் விண்வெளிக்கு சென்று வந்தார் என்பதும் அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஸ்ரீஷாபண்ட்லா பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
kidhours – tamil kids news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.