Open Immigration சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிட்கன் தீவில் குடியேறும் மக்களுக்கு வீடு, நிலம் என்பவை இலவசமாக வழங்கப்படுமென தெரியவந்துள்ளது.
அத்தோடு, அது உலகின் மிகச்சிறிய தீவாகவும் அங்கு 50 பேர் மட்டுமே வாழ்கின்றதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, குறித்த தீவில் இரண்டு குழந்தைகள் மாத்திரமே இருப்பதால் அங்கு பாடசாலைகள் இல்லை, அவர்கள் படிப்பதற்காக வெளியே செல்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல், நகரங்களைப் போன்ற சத்தம் இங்கு இல்லை, மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் சிறிய உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இருந்தபோதிலும், இங்கு குடியேறுவதற்கு 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே பெறப்பட்டுள்ளது.
![குடியேறினால் வீடு, நிலம் இலவசம் எந்த நாட்டில் தெரியுமா? Open Immigration 1 Open Immigration சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/Untitled-design-2024-01-31T191727.001.jpg)
இந்நிலையில், 2 மைல் நீளமும் 1 மைல் அகலமும் கொண்ட இந்த தீவு, உலகின் பிற பகுதிகளில் இருந்து இணைக்கப்படாமல் உள்ளது.இது தொடர்பில் அங்குள்ள இளம்பெண் ஒருவர் கூறுகையில், “கடைகள், உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை, நூலகம், சுற்றுலா அலுவலகம் மற்றும் அடிப்படை வசதிகள் இருந்தாலும், அதீத அமைதி காரணமாக மக்கள் இங்கு வந்து குடியேறுவதில்லை” எனக் கூறியுள்ளார்.
Kidhours – Open Immigration
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.