Tuesday, September 17, 2024
Homeசிறுவர் செய்திகள்2024 ஒலிம்பிக் வீராங்கனை தீவைத்து எரித்து கொலை! ஐ.நா கண்டனம் . Olympic Athlete Murdered

2024 ஒலிம்பிக் வீராங்கனை தீவைத்து எரித்து கொலை! ஐ.நா கண்டனம் . Olympic Athlete Murdered

- Advertisement -

Olympic athlete murdered சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட உகண்டா நாட்டைச் சேர்ந்த 33 வயதான உலகப் புகழ்பெற்ற மரதன் ஓட்ட வீராங்கனை Rebecca Cheptegei போட்டிகள் முடிந்து நாடு திரும்பிய நிலையில் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீராங்கனை ஒரு குழந்தையின் தாயான இவரை அவரின் முன்னாள் கணவனே எரியூட்டி கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

Rebecca Cheptegei இன் முன்னாள் கணவர் மறைந்திருந்து அவரின் உடல் மீது பெற்றோல் ஊற்றி நனைத்தபின்னர் தீ மூட்டியுள்ளார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர் கடந்த வியாழனன்று உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
Olympic athlete murdered சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Olympic athlete murdered சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அந்த நாட்டு காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை அறிக்கைகளின்படி அவரது உடலில் 80 வீதமான பகுதிகள் மிக மோசமாக எரிந்த காரணத்தால் அவருடைய உள்ளுறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது அதில் “மிகவும் கொடியது” என தனது இரங்கல் செய்தி தெரிவித்துள்ளது.

அதே நேரம் பாரிஸ் நகரசபை முதல்வர் Mme Anne Hidalgo “பாரிஸில் உள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு உகண்டா நாட்டின் ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை Rebecca Cheptegei பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்..

 

Kidhours – Olympic athlete murdered

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.