tamil kids news
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஒரு புதிய ஆராய்ச்சியில் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு தெரிய வந்துள்ளது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது
இந்த புதிய ஆய்வில், கொரோனா தொற்று கிழக்கு ஆசியாவில் பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆய்வில், நவீன சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாமில் உள்ள மக்களின் மரபணுவில் (DNA) இதன் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் குடும்ப வகையை சேர்ந்த வைரஸ்களின் மரபணு தழுவலின் அறிகுறிகள் கிழக்கு ஆசியாவை சேர்ந்த இந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் (Coronavirus) குடும்பத்தில் மெர்ஸ் (MERS ) மற்றும் சாரஸ் (SARS) வைரஸ்களும் அடங்கும்.
தற்போதுள்ள மக்களின் டி.என்.ஏவில் தலைமுறைகள் பழமையான பாதிப்புகளை கண்டறியும் இயந்திரங்கள் மற்றும் நுட்பங்களை மரபியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதாவது, இந்த ஆய்வு மற்றும் பரிசோதனைகளின் மூலம் சில நோய்கள் மற்றும் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கு முன்பே இருந்தாதா என்பதைக் கண்டறியலாம்.
அத்தகைய ஒரு ஆராய்ச்சியில், உலகெங்கிலும் 26 வெவ்வேறு இடங்களில் வசிக்கும் 2,500 க்கும் மேற்பட்டவர்களின் மரபணுக்கள் தொடர்பாக அதிநவீன ஆய்வு ஒன்றை மரபியலாளர்கள் நடத்தினர்.
இதற்குப் பிறகு, 42 வெவ்வேறு மனிதர்களின் மரபணுக்களில் காணப்படும் அறிகுறிகளை குறியாக்கம் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னால் கொரோனா (Corona) பரவல் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆய்வுகளில் கிடைத்த தகவல்களைகுறியாக்கம் செய்ததன் மூலம் நவீன கிழக்கு ஆசிய மக்களின் மூதாதையர்கள் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன.
இது மட்டுமல்லாமல், மரபணுவியலாலர்கள் நடத்திய மேலதிக சோதனைகளிலும் இந்த பாதிப்பு நுரையீரலில் காணப்பட்டது தெரியவந்தது. COVID-19 நுரையீரலை அதிகம் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோய்க்கு காரணமான SARS-CoV-2 வைரஸுக்கும், மரபணுவில் கிடைத்த சான்றுகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
kidhours – tamil kids news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.