Nuclear Plant Waste சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கிழக்காசிய நாடான ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்ததால் அங்குள்ள அணுமின் நிலைய கழிவுகளை அகற்ற நவீன ரோபோவை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக ஜப்பனின் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அங்கு காணப்படுகின்ற கழிவுகள் மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்த ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த முயற்சிக்கு பாரியளவு வெற்றி கிடைக்கவில்லை.
இருப்பினும் அங்குள்ள அணுஉலை கழிவுகளை அகற்ற நவீன ரோபோவை பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
குறித்த கழிவுப்பொருளானது மூன்று டொன் அளவில் கழிவுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. கதிரியக்க அளவினை அறிந்த பின்னர் முழு வீச்சில் இந்த பணி தொடரும் எனவும், இதனை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
Kidhours – Nuclear Plant Waste
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.