New Year Celebration சிறுவர்களுக்கான உலக செய்திகள்
குரோதி சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் சமய வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள், இலங்கையர்கள் உள்ளிட்ட உலக வாழ் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இலங்கையில் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலகின் பல்வேறு பாகங்களிலும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய நாள் உலகில் கொண்டாடப்படும் வைசாகி, நவராத்திரி, சோங்க்ரான் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் அவர் வாழ்த்துதல்களை தெரிவித்துள்ளார்.அத்துடன், கனடா உள்ளிட்ட உலக வாழ் தமிழ் மக்களுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கனடா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இன்று புத்தாண்டை வரவேற்க ஒன்றுபட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இடம்பெற்றவற்றுக்கு நன்றியுடன் இருப்பதற்கும் எதிர்காலத்தை நோக்கி புதிய எதிர்ப்பார்ப்பு மற்றும் உற்சாகத்துடன் பயணிப்பதற்கும் புத்தாண்டு வழிவகுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினரின் பங்களிப்பை நினைவுகூருவதாகவும் சிறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை புதுப்பிப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவை இந்த புது வருடம் கொண்டு வரட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
Kidhours – New Year Celebration
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.