Tamil Kids News New Virus சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயதான சிறுவனுக்கு பல அறிகுறிகள் தென்பட்டதால் பறவை காய்ச்சல் தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இதுவே பறவை காய்ச்சல் மனிதருக்கு பரவி வருவது முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்திருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டு இருக்கும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நான்கு வயதுடைய சிறுவனுக்கு காய்ச்சலுடன் சேர்ந்து பல அறிகுறிகள் காணப்பட்டு வந்த நிலையில் அவ்வப்போது சிறுவனை சோதித்து பார்த்ததில் அவருக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை வீட்டினில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கல் மூலமாக மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் ஆராய்ந்ததில் சிறுவனுடன் நெருங்கி இருந்தோர்கள் யாவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றனர்.
இந்த வைரஸ் குறித்து சுகாதார ஆணையம் தெரிவிக்கையில் ‘எச்3 என்8’ வைரஸ் மாறுபாடுகள் பறவைகள் மற்றும் குதிரைகள் நாய்கள் ஆகியவற்றில் இருந்து கண்டறியப்பட்டது. ஆனால் இப்படிப்பட்ட வைரஸ் தொற்றுகள் மனிதர்களுக்கு இதுவரை எதுவும் பரவியதாக பதிவாகவில்லை.
ஆரம்ப ஆய்வுகளின்படி இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை திரும்ப பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது. எச்3 என்8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News New Virus , Tamil Kids News New Virus update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.