Sunday, October 27, 2024
Homeசிறுவர் செய்திகள்8 கண்கள் கொண்ட புதிய தேள் இனம் New Species of Scorpion

8 கண்கள் கொண்ட புதிய தேள் இனம் New Species of Scorpion

- Advertisement -

New Species of Scorpion  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நாம் வாழும் இந்த பூமியில் பல்வேறு வகையான விலங்குகளும், தாவரங்களும் வாழ்கின்றன. இவற்றில் பலவற்றை நாம் அறிவோம், ஆனால் இன்னும் நமக்குத் தெரியாத பல உயிரினங்களும் உள்ளன. அவற்றை தேடி ஆராய்ந்து கண்டுபிடிக்க பல ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் Zootaxa இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் தாய்லாந்தின் ஃபெட்சாபுரி (Phetchaburi) மாகாணத்தில் உள்ள கேங் கிராச்சன் தேசிய பூங்காவில் (Kaeng Krachan National Park) ஒரு புதிய வகை தேள்களை ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

உலகில் பல விலங்குகள் மற்றும் உயிரினங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானிகள் தாய்லாந்தில் இதுவரை பார்த்திராத உயிரினம் ஒன்றை பார்த்தனர். இந்த உயிரினத்தை பார்த்து அவர்கள் முற்றிலும் ஆச்சரியமடைந்தனர்.

- Advertisement -

இந்த புதிய உயிரினம் ஒரு பாறையின் அடியில் மறைந்திருந்த 3 ஆண் மற்றும் 1 பெண் specimens-களின் அடிப்படையில் ஆய்வாளர்களால் விவரிக்கப்பட்டுள்ளது. 8 கண்கள் மற்றும் 8 கால்கள் கொண்டு சாதாரண தேள்களை விட சிறிய அளவில் இருக்கும் புதிய வகை தேள்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த புதிய தேள் இனம் யூஸ்கோபியோப்ஸ் (Euscopiops) என்ற துணைப்பிரிவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தவிர இந்த புதிய தேள் இனம் கண்டுபிடிக்கப்பட்ட தாய்லாந்தின் தேசிய பூங்காவிற்கு Euscorpiops Krachan என்று பெயரிடப்பட்டது தற்போது வைரலாகியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள கேங் கிராச்சன் தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, பாறைகளுக்கு அடியில் மறைந்திருந்த முடியுடன் கூடிய பழுப்பு நிற உயிரினங்கள் சில இருப்பதை கண்டனர். எனினும் உயிரினங்களின் நிறம் பாறையின் நிறத்துடன் ஒத்திருந்ததால் அவற்றை முதல் பார்வையில் அவற்றை வேறுபடுத்தி பார்ப்பதே மிக கடினமாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறி உள்ளார்கள்.

தங்கள் பார்த்த புதிய உயிரினம் ஏதோ இரையைத் தேடுவதாக முதலில் நினைத்ததாகவும், இருப்பினும், அருகில் சென்று பார்த்தபோது, அந்த உயிரினத்தின் 4 குழந்தைகளும் அதை ஒட்டியிருந்ததையும் பார்த்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அந்த குட்டி உயிரினங்களில் சில பெரிய உயிரினத்தின் முதுகிலும், சில அதன் காலடியிலும் இருந்தன. தவிர அந்த உயிரினத்திற்கு 8 கால்களும் 8 கண்களும் இருந்ததை கண்டு தாங்கள் மிகவும் ஆச்சரியமடைந்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

New Species of Scorpion  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
New Species of Scorpion  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஒருசில ஆய்வுகளுக்கு பிறகு தாங்கள் பார்த்த அந்த புதிய வகை உயிரினம் ஒரு புதிய வகை தேள் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த புதிய வகை தேளுக்கு கேங் கிரச்சன் ஸ்கார்பியன் என்று பெயரிட்டனர். இந்த புதிய தேளினம் 1 இன்ச் நீளம் மற்றும் அவற்றின் தோலில் முடி காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த புதிய தேள் வகையில் உச்சமாக இவற்றுக்கு மொத்தம் எட்டு கண்கள் மற்றும் எட்டு கால்கள் இருப்பது விஞ்ஞானிகள் மற்றும் வனவிலங்கு நிபுணர்களை அதிர்ச்சி மற்றும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

 

Kidhours – New Species of Scorpion

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.