New Blood Type Discovered பொது அறிவு செய்திகள்
அதிசயத்தில் ஆழ்த்திய பிரித்தானிய விஞ்ஞானிகள் 50 ஆண்டுகள் நீடித்த ஆராய்ச்சியின் விளைவாக புதிய இரத்த வகையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் புதிய ‘MAl’ என்ற ரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர்.
இது ஏற்கனவே உள்ள 4 முக்கிய ரத்த வகைகளுக்கு (A, B, AB, O) மேலாக வரும் ஒரு புதிய வகையாகக் கருதப்படுகிறது. இந்த புதிய ரத்த வகையை அடையாளம் காண, ஆய்வு குழு 5000 பேரின் ரத்தத்தை ஆராய்ந்தது. ‘
குறித்த MAl’ ரத்த வகை, மனித உடலின் இயல்புகளை மேலும் புரிந்து கொள்ள உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ‘MAl’ ரத்த வகை, ரத்த மாற்றம் மற்றும் ரத்ததானம் தொடர்பான செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அவசர மருத்துவ உதவிகளில் முக்கியமாக பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு, ரத்தவியல் மற்றும் மரபியல் ஆராய்ச்சியில் புதிய கேள்விகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ‘MAl’ ரத்த வகையைப் பற்றிய மேலதிக ஆய்வுகள் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே நடைபெற்று வருகிறது.
குறித்த இரத்த வகை தொடர்பில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப் புதிய கண்டுபிடிப்பு, மனித உடலின் ரத்தவியல் தொடர்பான மேலதிக புரிதலுக்கு வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ‘MAl’ ரத்த வகை, மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.
Kidhours – New Blood Type Discovered
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.